சூர்யாவைப் பின்தொடரும் 10 லட்சம் பேர்!

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ட்விட்டரில் அதிகாரபூர்வ கணக்கை துவங்கிய சூர்யாவை, இப்போது 10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்

செய்திகள் 4-Jul-2016 10:10 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு வருட பிறந்தநாளின்போதும் தனது ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார் சூர்யா. இருந்தாலும், தன் படங்கள் குறித்தும், தான் மேற்கொள்ளும் சமூக நலத்திட்டங்கள் குறித்தும் ரசிகர்களுக்கு அவ்வப்போது தெரிவிப்பதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ட்விட்டரில் அதிகாரபூர்வ கணக்கு ஒன்றைத் துவங்கினார். சூர்யாவின் இந்த வருகையை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தனர். இதனால் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கும் லட்சக்கணக்கான சூர்யா ரசிகர்கள் அவரை மளமளவென ஃபாலோ பண்ணத் துவங்கினர். சூர்யா ட்விட்டர் கணக்கைத் துவங்கி, கிட்டத்தட்ட 1 வருடங்கள் 3 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், இப்போது அவருக்கு 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர்.

தமிழ் சினிமா பிரபலங்களைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், த்ரிஷா போன்ற ஒருசில முன்னணி நட்சத்திரங்களை மட்டுமே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;