9 படங்களை கைவசம் வைத்திருக்கும் சாந்தினி?

மகிழ்ச்சியின் உச்சத்தில் சாந்தினி!

செய்திகள் 4-Jul-2016 10:06 AM IST VRC கருத்துக்கள்

பாக்யராஜ் இயக்கிய ‘சித்து +2’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இந்த படத்தை தொடர்ந்து ‘வில் அம்பு’ படத்தில் நடித்தார். இந்த படங்களை தொடர்ந்து சாந்தினி தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமலுக்கு ஜோடியாக ‘மன்னர் வகையறா’, சிபி ராஜுடன் ‘கட்டப்பாவை காணோம்’, பரத்துடன் ‘என்னோடு விளையாடு’, ‘வெப்பம்’ படத்தை இயக்கிய அஞ்சனானின் இயக்கத்தில் ‘பல்லாண்டு வாழ்க’, நடன இயக்குனர் கௌதம் இயக்கத்தில் ‘கண்ணுல காச காட்டப்பா’, இயக்குனர் அமீர் தயாரிப்பில் ‘டாலர் தேசம்’, ‘தாமி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷுடன் ‘நான் அவளை சந்தித்தபோது’, நவீன் கிருஷ்ணா, கீர்த்தி சுரேஷுடன் ‘அய்னா இஷ்டம் நூவு’ என்ற தெலுங்கு படம் என பல படங்களில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் இவ்வளவு படங்கள் கையில் இருப்பதால் சாந்தினி மிகவும் சந்தொஷத்தில் இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வஞ்சகர் உலகம் - ட்ரைலர்


;