அனைத்து வேலைகளும் முடிவடைந்த ரஜினியின் ‘கபாலி’ இம்மாதம் 15-ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று ‘கபாலி’யின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளார்கள். இதனை தொடர்ந்து இம்மாதம் 22-ஆம் தேதியாவது ‘கபாலி’ ரிலீசாகிவிடும் என்று ஏதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 22-ஆம் தேதியும் ‘கபாலி’ ரிலீசாகாதாம். லேட்டஸ்டாக கிடைத்த தகவலின் படி ’கபாலி’ அடுத்த மாதம் (ஆகஸ்ட்) தான் வெளியாகுமாம். அநேகமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெள்ளி கிழமை ‘கபாலி’ திரைக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இதனால் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் என்று அறிவித்திருந்த விக்ரமின் ‘இருமுகன்’, விக்ரம் பிரபுவின் ‘வாகா’ ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...