ஒரு மெல்லிய கோடு - விமர்சனம்

த்ரில்லர் ரசிகர்களுக்கான படம்!

விமர்சனம் 2-Jul-2016 3:56 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : A. M. R. Ramesh
Production : Akshaya Creations
Starring : Arjun, Shaam, Manisha Koirala, Aqsa Bhatt
Music : Ilaiyaraaja
Cinematography : Krishnasriram
Editing : K. V. Krishna Reddy

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘வனயுத்தம்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ள ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’ எப்படி?

கதைக்களம்

ஒரு இரவில் நடப்பது மாதிரி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா கொலை செய்யப்பட, அவருடைய உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென்று அவருடைய உடல் காணாமல் போகிறது. மனிஷா கொய்ராலாவின் கணவரான ஷாம் மீது போலீஸுக்கு சந்தேகம் வர, அவரை விசாரனை வளையத்துக்குள் கொண்டு வருகிறார் போலீஸ் அதிகாரி அர்ஜுன்! மனிஷாவின் உடலை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கும் போலீஸுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருக்கின்றன. அந்த சம்பவங்கள் என்ன? மனிஷாவை கொலை செய்தது யார்? இதற்கெல்லாம் பதில் தரும் படமே ‘ஒரு மெல்லிய கோடு’.

படம் பற்றிய அலசல்

இந்த கதையும் ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டதாம்! திரைக்கதையில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் குறைவில்லை என்றாலும் படம் முழுக்க முழுக்க ஒரு ஆஸ்பத்திரியை சுற்றியே நகர்வதால் கொஞ்சம் போரடிக்க வைக்கிறது. அதேபோல் சாமர்த்தியமான முறையில் கொலை செய்த ஒரு கொலையாளியையும், காணாமல் போன உடலையும் ஒரே ஒரு இரவில் கண்டுபிடிப்பது நம்பும் படியாக அமையவில்லை! இதுபோன்ற சில விஷயங்களை தவிர்த்துவிட்டு மனிஷாவை கொலை செய்தது யார்? அந்த உடலை கடத்தியது யார் என்பது தெரிய வரும்போது ஏற்படும் சர்ப்ரைஸ் அந்த குறைகளை மறக்கடிக்க செய்கிறது. அந்த வகையில் ‘மெல்லிய கோடு’ ரசிக்கும்படியான ஒரு க்ரைம் திரல்லர் படமாக அமைந்துள்ளது. படத்தின் விறுவிறுப்புக்கு இளையராஜாவின் பின்னணி இசையும், கிருஷ்ண ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் பக்க பலமாக அமைந்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

நிறைய ப்டங்களில் நாம் அர்ஜுனை கம்பீரமான, சுறுசுறுப்பான போலீஸ் அதிகாரியாக தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படத்தில் அர்ஜுனின் அந்த கம்பீரமும், விறுவிறுப்பும் மிஸ்ஸிங்! அமைதியான அடக்கமான போலீஸ அதிகாரியாக வந்து போகிறார்! தன்னை விட வயதில் மூத்தவரான மனிஷா கொய்ராலாவை திருமணம் செய்து கொண்டவராக வரும் ஷாம் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! அவரின் கேரக்டரும், நடிப்பும் அனைவரையும் கவர வாய்ப்புள்ளது. ஷாமின் காதலியாக வரும் அக்ஷரா பட் நடிப்பிலும், கிளாமரிலும் குறை வைக்கவில்லை. ஒரு இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கும் மனிஷா கொய்ராலாவும் தனது கேரக்டரை தனது பக்குவப்பட்ட நடிப்பால் சிறப்பித்துள்ளார். அர்ஜுனுடன் சக விசாரணை அதிகாரியாக வரும் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷும் பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.

பலம்

1. திரைக்கதையின் இடையிடையே வரும் திருப்பங்கள்
2. இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. கதை ஒரே இடத்தில் நகர்வது
2. நம்ப முடியாத சில காட்சி அமைப்புகள்

மொத்தத்தில்...

லாஜிக் விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது ‘ஒரு மெல்லிய கோடு’.

ஒரு வரி பஞ்ச் : த்ரில்லர் ரசிகர்களுக்கான படம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;