ஒரு படம்கூட ரிலீஸாகவில்லை; 5வது படத்தில் நாயகியான மஞ்சிமா!

சிம்புவைத் தொடர்ந்து விக்ரம் பிரபு, விஷ்ணு, விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட மஞ்சிமா இப்போது விஷாலுக்கும் ஜோடியாகிறாராம்

செய்திகள் 2-Jul-2016 12:08 PM IST Chandru கருத்துக்கள்

‘ஒரு வடக்கன் செல்பி’ படம் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை மஞ்சிமா மோகனை ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக்கினார் கௌதம் மேனன். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் புதிய படமொன்றில் விக்ரம் பிரபுவுக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் படத்திற்கும் நாயகியாக்கப்பட்டார் மஞ்சிமா. இந்த 3 படங்களை அடுத்து சமீபத்தில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கும் மஞ்சிமாதான் நாயகி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்போது விஷாலுக்கும் ஜோடியாகிறாராம் மஞ்சிமா.

‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் பரபரப்பாக ஆரம்பித்துள்ளதாக சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்படம் குறித்து நடிகர் விஷாலும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். இப்போது இப்படத்தின் நாயகியாக மஞ்சிமா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;