‘மாயா’ ஆரியின் இன்னொரு முகம்!

உதவி  இயக்குனர்களுக்கு உதவி செய்யும் ஆரி!

செய்திகள் 2-Jul-2016 11:04 AM IST VRC கருத்துக்கள்

‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ உட்பட பல படங்களில் நடித்துள்ள ஆரி, சொந்தமாக பட நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். ‘ஆரிமுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம் மூலம் உதவி இயக்குனர்களுக்கு குறும்படம் இயக்கும் வாய்ப்பை அளித்து, அதன் மூலம் பட வாய்ப்புகளை பெற்று தர இருக்கிறார்ஆரி! இது குறித்து அவர் கூறும்போது,

‘‘தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சினிமா இயக்கும் கனவோடு ஏராளமான இளைஞர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அப்படி வரும் இளைஞர்களுக்கு பல போராட்டங்களுக்கு பிறகே பிறகே ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி இரண்டு, மூன்று படங்களில் இயக்கத்தைக் கற்றுக்கொண்டாலும் உடனே படம் இயக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதற்கும் வாழ்க்கையுடன் நிறைய போராட வேண்டியுள்ளது. அப்படி போராடும் உதவி இயக்குநர்களுக்கு ஒரு படம் இயக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கத்தோடு துவங்கியிருக்கும் நிறுவனம் தான் ‘ஆரிமுகம்’. இந்த நிறுவனம் மூலம் நூறு ஆளுமைகளை சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளேன். அதில் சினிமாவின் அனைத்து துறையை சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளேன். பெரும்பாலான உதவி இயக்குநர்கள் தங்கள் கதையை ஒரு பத்து நிமிட குறும்படமாக எடுக்க கூட வசதியில்லாமல் சிரமப்படுகின்றனர். அதுபோன்ற உதவி இயக்குனர்களுக்கு குறும்படம் எடுப்பதற்கான உதவிகளை ‘ஆரிமுகம்’ செய்யும். அதன் மூலம் பட வாய்ப்பு பெறவும் உதவி செய்யும். என்னுடையை இந்த நிறுவனத்துடன் ‘வாவ் செலிபிரேஷன்’ முகமது இப்ராகிம், மற்றும் ‘மாஸ் மீடியா’ ஷாநவாஸ் ஆகியோரும் கை கோர்த்துள்ளனர். இது சம்பந்தமான விவரங்களை விளக்கமாக அளிக்க விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பை ஒன்றையும் நடத்த உள்ளேன்’ என்றார் ஆரி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;