ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தின் தமிழக விநியோக உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனமும், கேரள விநியோக உரிமையை நடிகர் மோகன்லாலும் கைபற்றியிருக்கும் நிலையில் இப்படத்தின் பாண்டிச்சேரி விநியோக உரிமையை ‘லெஜென்ட்ஸ் மீடியா’ ஜி.பி.செல்வகுமார் வாங்கியுள்ளார். இவர் ‘கபாலி’ படத்தின் விநியோக உரிமை வாங்கியதுடன் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆளுனர் கிரண்பேடி ஆகியோரை சந்தித்து திருட்டு விசிடியை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் நாராயணசாமியும், ஆளுனர் கிரண்பேடியும் திருட்டு விசிடியை முற்றிலுமாக ஒழிக்க தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார்களாம். மேலும் தங்களது ஏரியாவை சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு ‘கபாலி’ படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டை இலவசமாக வழங்க இருப்பதாகவும் கவர்னர் தெரிவித்தாராம். இதனால் பாண்டிச்சேரியிலுள்ள ரஜினி ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...