ராஜ வம்சத்து கடைசி வாரிசாக அர்விந்த் சாமி!

‘போகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் அர்விந்த் சாமி, ராஜ வம்சத்து கடைசி வாரிசாக நடிக்கிறாராம்

செய்திகள் 1-Jul-2016 11:15 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு ஸ்டில் வெளிவந்ததும், அதில் அவர் இருந்த கெட்அப்பைப் பார்த்து அவர் இந்த கேரக்டரில்தான் நடிக்கிறார் என யூகித்து ஆளாளுக்கு ஒரு கதை கட்டுவதுதான் சோஷியல் மீடியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் வேலை. இப்படித்தான்.... ஜெயம் ரவியும், அர்விந்த் சாமியும் போலீஸ் யூனிஃபார்மில் இருக்கும் ‘போகன்’ படத்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாக, இருவரும் போலீஸாக நடிக்கிறார்கள் என்பது தொடங்கி படத்தின் முழுக்கதையையும் பலர் தங்களது கற்பனையில் எழுதித் தள்ளினார்கள். ஆனால், நாம் விசாரித்தவரை ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவி மட்டுமே போலீஸாக நடிக்கிறார் என சூடம் ஏற்றி சத்தியம் செய்தார்கள் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள்.

‘ரோமியோ ஜூலியட்’ படத்தைத் தொடர்ந்து லக்ஷ்மண் இயக்கும் இப்படத்தின் முதல் பாதி முழுக்க ஜெயம் ரவிக்கு முக்கியத்துவம் இருப்பதுபோலவும், இரண்டாம் பாதியில் அர்விந்த் சாமியின் அட்டகாசங்கள் இருப்பது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். ராஜ வம்சத்து கடைசி வாரிசாக இப்படத்தில் நடிக்கும் அர்விந்த் சாமி, ராஜ பரம்பரையின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்குவதால் கடும் கோபத்திற்கு ஆளாகிறாராம். அதன்பிறகு அவருக்கும், போலீஸ் ஜெயம் ரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் ‘போகன்’ படமாம்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கும்இப்படத்தில் இன்னொரு போலீஸாக ‘ஆரம்பம்’ அக்ஷரா கவுடா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்க ஒளிப்பதிவு செய்கிறார் சவுந்தர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;