அருள்நிதிக்கு ஜோடியாகும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி!

ராதா மோகன் இயக்கத்தில் அருள்நிதி!

செய்திகள் 1-Jul-2016 10:59 AM IST Top 10 கருத்துக்கள்

‘உப்பு கருவாடு’ படத்தை தொடர்ந்து ராதா மோகன் இயக்கும் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார் என்றும், இப்படத்தை ‘சேதுபதி’ படத்தை தயாரித்த ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது என்றும் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அருள் நிதியுடன் கதாநாயகியாக அறிமுகமாகிறார் தான்யா. இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். விவேக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். ‘ஜில் ஜங் ஜக்’ பட இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். வசனங்களை பொன் பார்த்திபன்ன் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. வான்சன் மூவீஸ் நிறுவனம் தற்போது ஜெய், ப்ரணிதான் நடிப்பில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது. இப்படத்தை மகேந்திரன் ராஜாமணி இயக்கி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிருந்தாவனம் - டீசர்


;