மெட்ராஸை தொடர்ந்து ‘சைனா’வில் கலையரசன்!

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கத்தில் கலையரசன்!

செய்திகள் 1-Jul-2016 10:50 AM IST VRC கருத்துக்கள்

‘மெட்ராஸ்’, ‘டர்லிங்-2’, ‘ராஜா மந்திரி’ ஆகிய படங்களை தொடர்ந்து கலையரசன் நடித்துள்ள ரஜினியின் ‘கபாலி’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘சைனா’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்த ஹர்ஷவர்தனா இயக்கியுள்ளார். இவர் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் ஜெ.ஜி.விஜயம் என்பவரின் பேரன் ஆவார். பர்மா பஜார் பின்னணியில் சொல்லப்படும் கதையாம் ‘சைனா’. இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்துள்ளர். ‘சூது கவ்வும்’ படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த யோக் ஜேபி, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்த டேனியல் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளன்ர். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘மதுபானக்கடை’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த வேத் சங்கர் இசை அமைக்கிறார். ‘ஆர்காஷ் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘சைனா’வின் இறுதிகட்ட வேலைகள் தற்அபோது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;