பாடலாசிரியர் டு வசனகர்த்தா : யுகபாரதியின் அவதாரம்!

நிருபராக இருந்து பாடலாசிரியராக மாறிய கவிஞர் யுகபாரதி, இப்போது வசனகர்த்தா அவதாரம் எடுத்துள்ளார்

செய்திகள் 1-Jul-2016 10:43 AM IST Chandru கருத்துக்கள்

‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா...’, ‘சந்திரமுகி’யின் ‘கொஞ்ச நேரம்...’ போன்ற பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றவர் கவிரும், பாடலாசிரியருமான யுகபாரதி. 14 வருடங்களாக பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த யுகபாரதி, இப்போது சுசீந்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் வசனகர்த்தா அவதாரம் எடுத்திருக்கிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, மஞ்சிமா மோகன் ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத படம் ஜூலை 3வது வாரம் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை 45 நாட்களில் முடிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறாராம் சுசீந்திரன். ‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப்பிறகு பார்த்திபன் வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். காமெடி ஏரியாவை வழக்கம்போல் சூரி கவனித்துக் கொள்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;