கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் சுந்தர்.சியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இதுவரை ஒரு படத்தில்கூட இணைந்து பணியாற்றியது இல்லை. சுந்தர்.சியின் படங்களைப் பொறுத்தவரை அவரே ஹீரோ... அவரின் காமெடிக் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்கிறார்கள். இதனால்தானோ என்னவோ, ரஹ்மான் போன்ற உச்ச இசையமைப்பாளரின் பங்கு அவர் படங்களுக்கு இதுவரை தேவைப்பட்டதில்லை.
ஆனால், இப்போது சுந்தர்.சி படத்திற்கு ரஹ்மான் தேவைப்பட்டுள்ளார். ஆம்... இந்தியாவிலேயே மிக அதிக பொருட்செலவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறேன் என சமீபத்தில் சுந்தர்.சி அறிவித்திருந்தார். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக உருவாகவிருக்கும் அப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முற்றிலும் புதிய கோணத்தில் சுந்தர்.சி எடுக்கவுள்ள இப்படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....