மீண்டும் ‘ஆரண்யகாண்டம்’ புகழ் ஜாக்கி ஷெராஃப்!

ஆரண்யகாண்டம், கோச்சடையான் படங்களைத் தொடர்ந்து ‘மாயவன்’ படத்தில் நடிக்கும் ஜாக்கி ஷெராஃப் தன் கேரக்டர் பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

செய்திகள் 1-Jul-2016 9:54 AM IST Chandru கருத்துக்கள்

குமாரராஜா தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்து, தேசிய விருதை வென்ற ‘ஆரண்யகாண்டம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப். இப்படத்தில் அவர் ஏற்றிருந்த சிங்கபெருமாள் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி விமர்சகர்களிடத்திலும் பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தில், மோஷன் கேப்சர் டெக்னாலஜி மூலம் மீண்டும் வில்லனாக நடித்து அசத்தினார்.

இப்போது... சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாயவன்’ படத்தின் மூலம் தனது 3வது தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜாக்கி. இப்படத்தில் அவரின் கேரக்டர் பற்றி சமீபத்தில் டிவி பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட ஜாக்கி, ‘‘நான் இராணுவ வீரனாக நடிக்கிறேன், ஆனால் அது மட்டுமே உண்மையல்ல... என்னுடைய கேரக்டரில் ஒரு ட்விஸ்ட்டும் இருக்கிறது!’’ என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்குப் பிறகு மேலும் தமிழ் சினிமாவில் பல நல்ல கேரக்டர்கள் தனக்காக வரும் என்று நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார் ஜாக்கி ஷெராஃப்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;