‘எந்திரன் 2’ அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது?

‘கபாலி’ டப்பிங்கை முடித்துவிட்டு தற்போது ஓய்விலிருக்கும் ரஜினி, மீண்டும் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்

செய்திகள் 30-Jun-2016 2:11 PM IST Chandru கருத்துக்கள்

ஒரே நேரத்தில் ரஞ்சித்தின் ‘கபாலி’ மற்றும் ஷங்கரின் ‘எந்திரன் 2’ படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி, உடல்நலக்குறைவு காரணமாக தற்போது வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ‘கபாலி’ படத்தைப் பொறுத்தவரை ரஜினி சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. அதேபோல், ‘எந்திரன் 2’வில் ரஜினி சம்பந்தப்பட்ட பெரும்பாலான முக்கிய காட்சிகளை ஏற்கெனவே ஷங்கர் படமாக்கிவிட்டார் என்றும் கூறுகிறார்கள். தவிர, ‘எந்திரன் 2’வைப் பொறுத்தவரை கிராபிக்ஸ் வேலைகளுக்கே பெரிய முக்கியத்துவம் இருப்பதால், இனி ரஜினியின் பங்களிப்பிற்கு பெரிய அவசியம் இருக்காதாம்.

இந்நிலையில், ரஜினியின் உடல்நிலையைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், லைக்கா புரடொக்ஷன் நிறுவன எக்ஸிக்யூடிவ் புரொடியூசரான ராஜு மகாலிங்கம் ரஜினியுடன் தான் பேசியிருப்பதாகவும், ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் ஜூலை மாத இறுதியில் சென்னையில் பிரம்மாண்ட செட்களில் ‘எந்திரன் 2’வின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;