3வது முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஸ்ரீதிவ்யா!

சிவகார்த்திகேயனுடன் இரண்டு படங்களில் நாயகியாக நடித்த ஸ்ரீதிவ்யா, இப்போது ‘ரெமோ’ படத்தில் சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்கிறார்

செய்திகள் 30-Jun-2016 11:49 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் தலைமையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டையே பிரம்மாண்டமாக நடத்தி, தமிழ் திரையுலகையே வாய்பிளக்க வைத்துள்ளது ‘ரெமோ’ டீம். படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ்தான் என்றாலும், அவரையே பெறாமைப்பட வைக்கும் அளவுக்கு அமைந்திருக்கிறதாம் சிவகார்த்திகேயனின் லேடி கெட்அப். ஆக... இந்த இரண்டு ஹீரோயின்களோடு இப்போது மூன்றாவதாகவும் ஒரு ஹீரோயின் இணைந்திருக்கிறாராம் ‘ரெமோ’வில்.

அவர் வேறு யாருமல்ல... ஸ்ரீதிவ்யாதான்! சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா, ‘காக்கி சட்டை’ படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இந்த நட்பின் அடையாளமாக இப்போது சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படைப்பான ‘ரெமோ’வில் சிறப்புத் தோற்றம் ஒன்றில் தோன்றியிருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா. ஏற்கெனவே இப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரும் சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;