பேய்ப்படங்கள் ஒன்றும் தமிழ் சினிமாவிற்கு புதிதில்லை என்றாலும், இயக்குனர் செல்வராகவனின் முதல் பேய்ப்படம் என்ற வகையில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ நிச்சயம் ரசிகர்களுக்கு புதுசுதான். ‘‘நிச்சயமாக செல்வராகவனின் முதல் பேய்ப்படம் என்பதால் ‘நெஞ்சம் மறப்பதில்லை’யில் புதிய விஷயங்களை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்!’’ என சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கிறார் படத்தின் நாயகி ரெஜினா கெஸன்ட்ரா.
இதுதவிர மேலும் சில தகவல்களையும் வெளியிட்டுள்ளார் நடிகை ரெஜினா. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் ‘மரியம்’ என்ற குழந்தை பராமரிப்பாளர் கேரக்டரில் நடிக்கும் ரெஜினாவுக்கு, படத்தில் பயங்கரமான சண்டைக்காட்சிகளும் இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல், நாயகன் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், நந்திதாவுக்கும் இடையே நடைபெறும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களை நடு நடுங்க வைக்கும் எனவும் ரெஜினா குறிப்பிட்டுள்ளார்.
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, டப்பிங், ரீரிகார்டிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ மற்றும் ‘கண்ணாடி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில்...
‘மான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும்,...