இந்திய சினிமா வரலாற்றில் இப்படி ஒரு புரமோஷன் வேறெந்தப் படத்திற்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. சாதாரணமாக ஒரு படத்தின் விளம்பரத்திற்காக இணையதளம், எஃப் எம், டிவி ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள். அதையும் மீறினால் பஸ்களில், ஆட்டோக்களில் விளம்பர போஸ்டர்களை ஒட்டி புரமோட் செய்வார்கள். கொஞ்சம் பெரிய பட்ஜெட் படமொன்றால் ரயிலில் கூட விளம்பரங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இது எல்லாவற்றையும் மிஞ்சி, இப்போது ‘கபாலி’யின் விளம்பரத்திற்காக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் இந்திய சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆம்.... ‘கபாலி’யின் அதிகாரபூர்வ ஏர்லைன் பார்ட்னராக கைகோர்த்துள்ள ஏர் ஏசியா விமான நிறுவனம், ‘கபாலி’ படத்தின் பேஸ்டர் டிசைன்களால் பெயின்ட்டிங், ஸ்டிக்கரிங் செய்யப்பட்ட பிரத்யேக விமானம் ஒன்றை பறக்கவிடுகிறது. இந்த விமானம் பெங்களூரு, டெல்லி, கோவா, புனே, சண்டிகார், ஜெய்பூர், குஜராத், இம்பால், விசாகப்பட்டிணம், கொச்சி உட்பட இந்தியாவில் பல இடங்களில் பயணிக்க இருக்கிறது. அதோடு, ‘கபாலி’யின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக பெங்களூரிலிருந்து சென்னைக்கு பிரத்யேக விமான சேவை ஒன்றையும் ஏற்கெனவே ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் உலகப் புகழ்பெற்ற டிஸ்கவரி சேனலின் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து ‘MAN VS WILD என்ற...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து...