‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வில் தனுஷிற்கு இரண்டு லுக்!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன

செய்திகள் 30-Jun-2016 10:10 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் இறுதிகட்ட வேலைகளில் இருக்கும்போதே தனுஷுடன் இணைந்து ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தின் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். மார்ச் 14ஆம் தேதி பூஜை போடப்பட்டு, தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே துருக்கியில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார் கௌதம். தற்போது இப்படம் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

கௌதம் படம் என்றாலே, அதில் ஆங்காங்கே முக்கிய நட்சத்திரம் ஒன்றின் ‘வாய்ஸ் ஓவர்’ ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வைப் பொறுத்தவரை மொத்த படம் வாய்ஸ் ஓவரை மையமாக வைத்து நகரும்படிதான் திரைக்கதை அமைத்திருக்கிறாராம். முதல் பாதியில் லவ், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் என நகரும் இப்படத்தில் நாயகி மேகா ஆகாஷிற்கு சினிமா ஹீரோயின் கேரக்டராம். இப்படத்தில் தனுஷிற்கு இரண்டு ‘லுக்’ கொடுத்திருக்கிறார் கௌதம். ஒன்று, ஸ்மார்ட்டான சாக்லேட் பாய் லுக். மற்றொன்றிற்காக இதுவரை தனுஷ் தோன்றாத புதுவித கெட்அப்பில் இருப்பார் என்கிறார்கள்.

கௌதமின் ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’, தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரிக்கும் இப்படத்தை மதனின் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் ராணா டகுபதி முக்கிய வேடமொன்றில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;