4 ஹீரோ, 3 ஹீரோயின்: கௌதமின் அடுத்த புராஜெக்ட்!

அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கிப் பாயும் தோட்டா படங்களைத் தொடர்ந்து கௌதம் இயக்கவிருக்கும் ‘ஒன்றாக’!

செய்திகள் 30-Jun-2016 10:03 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டீஸர், டிரைலர், பாடல்கள் வெளியிடப்பட்டு ரிலீஸுக்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு, கௌதம் இயக்கும் இன்னொரு படமான தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வும் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்த வருடம் நாலு ஹீரோ, மூணு ஹீரோயின் நடிக்கும் நான்கு மொழிப் படம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார் கௌதம் மேனன்.

‘ஒன்றாக’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்காக மலையாளத்திலிருந்து ப்ருத்விராஜ், தெலுங்கிலிருந்து சாய் சரண்தேஜ், கன்னடத்திலிருந்து புனித் ராஜ்குமார் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அதேபோல்... அனுஷ்கா, தமன்னா இருவரும் இப்படத்தின் ஹீரோயின்களாகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். தமிழுக்கான கதாநாயகன், மூன்றாவது நாயகி ஆகியோருக்கான தேடுதல் வேட்டை தற்போது நடந்து வருகிறது.

படத்தின் நான்கு ஹீரோக்களும் இணைந்து ‘ட்ரிப்’ ஒன்றிற்குச் செல்லும்போது, அங்கே நடக்கும் பரபரப்பான விஷயங்களை மையமாக வைத்துதான் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாராம் கௌதம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;