சூப்பர் ஸ்டார் படத்தை வாங்கிய சூப்பர் ஸ்டார்!

கேரளாவிலும் சாதனை படைக்கும் ரஜினியின் ‘கபாலி’

செய்திகள் 30-Jun-2016 9:56 AM IST VRC கருத்துக்கள்

இறுதிக்கட்ட வேலைகளில் இருந்து வரும் ரஜினிகாந்தின் ‘கபாலி’ விரைவில் சென்சாருக்கு சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. விரைவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் என நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கபாலி’ படத்தின் தமிழக உரிமையை ‘ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் கேரள வியாபாரமும் முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் கேரள விநியோக உரிமையை கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கைபற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மோகன் லாலின் ‘மேக்ஸ் லேப் சினிமாஸ்’ நிறுவனமும், மோகன்லாலின் மானேஜர் ஆண்டனி பெரும்பாவூரின் ‘ஆசீர்வாத் சினிமாஸும்’ சேர்ந்து 8.5 கோடி ரூபாய்க்கு ’கபாலி’யின் கேரள விநியோக உரிமையை கைபற்றியுள்ளதாம். இவ்வளவு பெரிய தொகைக்கு கேரளாவில் இதுவரை வேறு எந்தவொரு நேரடி தமிழ் படமும் வியாபாரம் ஆனதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தெறி’யின் கேரள விநியோக உரிமை 5.6 கோடி ரூபாய்க்கு விலை போனதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தது. விஜய்யின் ‘தெறி’யை தொடர்ந்து இப்போது ரஜினியின் ‘கபாலி’ திரைப்படம் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;