தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தும் வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தேனாண்டாள் என்டர்டெய்ன்மென்ட் எனும் பெயரில் கச்சேரி மற்றும் டிராமாக்களையும் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் சார்பாக தற்போது தயாராகி வரும் ஹிந்தி நாடகம் 'மேரா ஹோ மத்லப் நஹி தா' (Mera Woh Mathlab Nahi Tha). ராகேஷ் ரெட்டி இயக்கத்தில் அனுபம் கேர், நீனா குப்தா ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த நாடகத்தின் முதல் பார்வையை இயக்குனர் மணிரத்னம் வெளியிட தயாரிப்பாளர் முரளியின் துணைவியார் ஹேமா ருக்மணி பெற்றுகொண்டார். இந்நாடகம் வரும் செப்டம்பர் 18-ம் தேதி மாலை 6.30 மணியளவில் சென்னை மியூசிக் அகாடமியில் அரங்கேற்றப்படவுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வசூலை ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்காக பயன்படுத்த தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...
விக்ரம் நடிப்பில் வெளியான ‘டேவிட்’, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படமான ‘சோலோ’ மற்றும் சில...