இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்!

இந்த வாரம் என்னென்ன படங்கள்?

செய்திகள் 29-Jun-2016 3:29 PM IST VRC கருத்துக்கள்

கடந்த ஒரு சில வாரங்களாக இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் இந்த வாரம் 6 திரைப்படங்கள் ரிலீசாகவிருக்கிறது. தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடித்துள்ள ‘ஜாக்சன் துரை’, ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா நடித்துள்ள ‘ஒரு மெல்லிய கோடு’, சமுத்திரகனி இயக்கி, தயாரித்து, நடித்துள்ள ‘அப்பா’, ராம்கோபால் வர்மா இயக்கத்தில்உருவாகியுள்ள ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’, ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசா’, விஜய் சண்முகவேல் அய்யனாரின் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’ ஆகியவையே அந்த 6 படங்கள்! சிபி ராஜ், சத்யராஜ் இணைந்துள்ள ‘ஜாக்சன் துரை’ ஹாரர் ரக படமாக உருவாகியுள்ளது. சமுத்திரகனி இயக்கியுள்ள ‘அப்பா’ பிள்ளைகள் வளர்ப்பு குறித்து நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக அமைந்துள்ளது. ராம்கோபால் வர்மாவின் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ சந்தன கடத்தல் வீரப்பனை பற்றிய படமாகும். ‘ஒரு மெல்லிய கோடு’ க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. அப்துல் மஜீத் இயக்கியுள்ள ‘பைசா’ குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்துபவர்கள் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி வித்தியாசமான கதை களங்களுடன் இந்த வாரம் வெள்ளிக் கிழமை ரிலீசாகும் இந்த 6 படங்களில் என்னென்ன படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களாக அமையும் என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;