‘கபாலி’ போஸ்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தாணு!

பாலிவுட் படமான ‘மடாரி’ பட போஸ்டரை காப்பியடித்து ‘கபாலி’ பட போஸ்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு

செய்திகள் 29-Jun-2016 10:18 AM IST Chandru கருத்துக்கள்

உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜூலை 15 அல்லது 22ஆம் தேதி வெளியாகும் என டிரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்தில் ‘கபாலி’யின் சென்சார் ரிசல்ட்டும் தெரிந்துவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், திடீரென சர்ச்சை ஒன்றை கிளப்பியிருக்கிறார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான்.

இர்ஃபான் கான் நடிப்பில் உருவாகிவரும் ‘மடாரி’ என்ற ஹிந்தி படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. விண்ணை முட்டும் மலேசிய கட்டிடங்களுக்கு நடுவே இர்ஃபானின் முகம் மட்டும் தெரிவதுபோல் உருவாக்கப்பட்டிருந்தது இந்த போஸ்டர். ‘கபாலி’ படமும் மலேசியாவை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்பதால், ரஜினி ரசிகர் யாரோ ஒருவர் இதேபோன்ற வடிவமைப்பு கொண்ட ‘கபாலி’ போஸ்டர் ஒன்றை உருவாக்கி இணையதளத்தில் உலவவிட்டுள்ளார். இது இர்ஃபானின் கவனத்திற்கு வரவும், அந்த போஸ்டர் அதிகாரபூர்வ போஸ்டர் என நினைத்து, தன் பட போஸ்டரை காப்பியடித்துள்ளதாகக் கூறி ‘கபாலி’ டீமுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதனை பாலிவுட் மீடியாக்கள் பெரிய சர்ச்சையாக்கவிட்டன. விஷயம் தெரியாத நம்மூர் மீடியாக்கள் சிலவும் அந்த சர்ச்சை உண்மை என நினைத்து செய்தி வெளியிட்டதுதான் உச்சகட்ட கொடுமை.

இதனையடுத்து தற்போது இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். ‘இது ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர். அதிகாரபூர்வ போஸ்டர் அல்ல’ என சிஎன்என் நியூஸ் சேனலுக்கு ட்வீட் மூலம் ரிப்ளை கொடுத்துள்ளார் தாணு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;