10 லட்சத்தைத் தாண்டிய அனிருத்தின் ‘ஹோலா அமிகோ’!

‘ரம்’ படத்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகி வெளிவந்த ‘ஹோலா அமிகோ’ சிங்கிள் டிராக் யு டியூப்பில் 1 மில்லியன் பார்வையிடல்களைக் கடந்துள்ளது

செய்திகள் 29-Jun-2016 10:12 AM IST Chandru கருத்துக்கள்

இன்றைய தேதியில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளராக உருவாகி வருபவர் சாட்சாத் அனிருத்தான். அவரின் தனிப்பட்ட ஆல்பமாக இருந்தாலும் சரி அல்லது சிங்கிள் டிராக் பாடலாக இருந்தாலும் சரி அது சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டாகிவிடும். அதுதான் அவர் இசையமைக்கும் படங்களுக்கான மிகப்பெரிய பலம். அந்தவகையில், தனது சகோதரர் ரிஷிகேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரம்’ படத்திற்காக அனிருத்தின் இசையமைப்பில் உருவான ‘ஹோலா அமிகோ...’ என்ற சிங்கிள் டிராக் ஏப்ரல் 26ஆம் தேதி யு டியூப்பில் வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 2 மாதங்களாகியிருக்கும் நிலையில், தற்போது 10 லட்சம் பார்வையிடல்களைத் தாண்டிச் சென்றுள்ளதால் ‘ரம்’ டீம் பெரிய சந்தோஷத்திலிருக்கிறது.

இப்பாடலுக்கு இசையமைத்தது மட்டுமின்றி ராப் பாடகர் பாலன் காஷ்மீருடன் இணைந்து இப்பாடலைப் பாடவும் செய்திருக்கிறார் அனிருத். ராப் வரிகளை பாலன் காஷ்மீர் எழுத, பாடல் வரிகளை மதன் கார்க்கி தந்துள்ளார். சாய் பரத் இயக்கி வரும் இப்படத்தை விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;