சந்தானம் படத்தை ரிலீஸ் செய்யும் ‘தலைவா’ தயாரிப்பாளர்!

சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் தியேட்டரிக்கல் ரைட்ஸை கைப்பற்றியுள்ளார் விஜய் படத் தயாரிப்பாளர்!

செய்திகள் 28-Jun-2016 4:06 PM IST Chandru கருத்துக்கள்

விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த சந்தானம், இப்போது ‘தில்லுக்கு துட்டு’ படம் மூலம் விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலாவுடன் இணைந்திருக்கிறார். ஹாரர் படங்களின் மூலம் கணிசமாக கல்லா கட்டி வரும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. சந்தானத்திற்கு ஜோடியாக ஷனயா நடிக்கும் இப்படத்தில் கருணாஸ், நான் கடவுள் ராஜேந்திரன், ஆனந்தராஜ், சிங்கமுத்து உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

டீஸர், பாடல்கள், டிரைலர் என அனைத்துவித புரமோஷன்களிலும் பரபரப்பாக இருக்கும் இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் கைப்பற்றியுள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தலைவா’ படத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியவர் என்பது குறிப்பிடத்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;