‘கபாலி’யுடன் களமிறங்கும் சேரன் படம்!

தியேட்டருக்கு வரும் சேரனின் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’

செய்திகள் 28-Jun-2016 2:06 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சேரனின் இயக்கத்தில் உருவான படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’. சர்வானந்த், நித்யா மேனன் ஜோடியாக நடித்த இப்படம் தெலுங்கில் ‘ராஜாதி ராஜா’ என்ற பெயரில் சென்ற 24-ஆம் தேதி வெளியானது. கிட்டத்தட்ட 250 தியேட்டர்களில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வர்வேற்பு கிடைத்திருப்பதோடு, சேரனுக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இந்த படத்தின் வரவேற்புக்கு சர்வானந்த், நித்யா மேனன் ஆகியோருக்கு ஆந்திராவில் இருக்கும் மவுசும் ஒரு காரணம்! இப்படத்திற்கு ஆந்திராவில் வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து சேரன் இப்படத்தை தமிழில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே இந்த படத்தை சேரன் டிவிடியாக வெளியிட்டார் என்றாலும் தியேட்டர் உரிமையாளர்கள் ‘இது நல்ல படம், இப்படத்தை இன்னும் நிறைய ரசிகர்கள் பார்க்கவில்லை, இதனை தியேட்டர்களில் வெளியிட்டால் அதன் மூலம் வரும் வருமானம் சேரனின் பொருளாதாரா நெருக்கடிக்கு உதவியாக இருக்கும்’’ என்றும் கூறியிருப்பதால் சேரன் ’ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ஜூலை மாதம் 15-ஆம் தேதி அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;