வடிவேலுக்காக புதிய காமெடி காட்சிகளை சேர்க்கும் பி.வாசு!

‘சந்திரமுகி’ முருகேசன் கேரக்டரைப்போல், ‘சிவலிங்கா’விலும் வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பி.வாசு

செய்திகள் 28-Jun-2016 1:45 PM IST Chandru கருத்துக்கள்

‘மாப்பு... வச்சுட்டாட்டான்ட ஆப்பு!’ என்ற வடிவேலுவின் காமெடி டயலாக்கை அத்தனை சீக்கிரத்தில் ரசிகர்கள் யாரும் மறந்துவிட முடியாது. பி.வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடித்து 2005ல் வெளிவந்த ‘சந்திரமுகி’ படத்தில் ‘முருகேசன்’ என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் வடிவேலு. அப்படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இணைந்திருக்கிறது இயக்குனர் பி.வாசு, காமெடியன் வடிவேலு கூட்டணி.

வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘சிவலிங்கா’ திரைப்படம், இங்கே தமிழில் அதே பெயரில் ரீமேக்காகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸும், ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங்கும் ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் காமெடியனாக களமிறங்குகிறார் வடிவேலு. கன்னட ‘சிவலிங்கா’வில் காமெடியன் கேரக்டருக்கு, பெரிய முக்கியத்துவம் இருக்காது. ஆனால், இங்கே வடிவேலுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு பெரிது என்பதால், சிற்சில காமெடிக்காட்சிகளை வடிவேலு ரசிகர்களுக்காகவே படத்தில் சேர்க்கவிருக்கிறாராம் பி.வாசு. இப்படத்தில் வாசுவின் மகன் சக்தியும், முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர் 02


;