தெலுங்கில் 20 கோடியை நெருங்கும் பிச்சைக்காரன்!

தெலுங்கில் சாதனை படைத்த ‘பிச்சைக்காரன்’

செய்திகள் 28-Jun-2016 12:52 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆன்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வசூலை அள்ளியதோடு, விமர்சன ரீதியாகவும் பேசப்பட்து. இப்படம் சமீபத்தில் தெலுங்கிலும் ‘பிச்சகாடு’ என்ற பெயரில் வெளியானது. தமிழ் ‘பிச்சைக்காரனு’க்கு கிடைத்த வரவேற்புக்கு இணையான வரவேற்பு தெலுங்கு ‘பிச்சகாடு’விற்கும் கிடைத்துள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஒரு தகவலின் படி ‘பிச்சகாடு’ ஆந்திராவில் 8 கோடி ரூபாயும், ராயலசீமாவில் 5 கோடி, நிசாமில் 5 கோடி என மொத்தம் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை விஜய் ஆண்டனியும் தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். இந்த வசூல் சாதனையால் ‘பிச்சைக்காரன்’ டீம் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;