அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா, அக்ஷரா பட் முதலானோர் நடித்து ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ள படம் ‘ஒரு மெல்லிய கோடு’. ஏற்கெனவே ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, எதிர்பாராத சில பிரச்சனைகளால் அந்த தேதியில் இப்படம் ரிலீசாகவில்லை. இப்போது அந்த பிரச்சனைகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்ட நிலையில் ‘ஒரு மெல்லிய கோடு’ ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதே தினம் தான் சிபிராஜின் ‘ஜாக்சன் துரை’, சமுத்திரக்கனியின் ‘அப்பா’, ராம்கோபால் வர்மாவின் ‘வில்லாதி வீரன் வீரப்பன்’ ஆகிய படங்களும் வெளியாகவிருக்கிறது. ‘அக்ஷயா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி, தயாரித்துள்ள ‘ஒரு மெல்லிய கோடு’க்கு இளையராஜ இசை அமைத்துள்ளார். சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
‘பூவரசம் பீப்பி’ படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம்...