ஜூலையில் ரிலீஸாகும் ‘ஐஸ் ஏஜ்’ அனிமேஷன் படத்தின் 5ஆம் பாகம்!

ஜூலையில் ரிலீஸாகும் ‘ஐஸ் ஏஜ்’ அனிமேஷன் படத்தின் 5ஆம் பாகம்!

செய்திகள் 28-Jun-2016 11:36 AM IST Chandru கருத்துக்கள்

2002-ஆம் ஆண்டு 'Ice Age' என்கிற animation படம் வெளியாகி, மிக பெரிய வெற்றியையை கண்டது. அதைத் தொடர்ந்து, 2006-இல் 'Ice Age: Melt Down' என்கிற அதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்து மீண்டும் வெற்றி வாகை சூடியது! 2009-இல் 3ம் பாகம் 'Ice Age:Dawn of the Dinosaurs' வெளியாகி அதுவும் ஹிட் ஆனது! அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'Ice Age: Continental Drift' 3D வடிவில் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

நான்கு வருடத்திற்கு பிறகு, 2016-இல், 'Ice Age: Collision Course' திரைப்படம், 3D மற்றும் 2D பரிமாணங்களில், வரும் ஜூலை 15ல் வெளியாக உள்ளது. முன்பு வெளிவந்த பதிப்புகளை விட, இதில் காட்சிகள், வெகு சிறப்பாக உருவாக்கபட்டுள்ளதாம்! 2012-இல் வெளிவந்த நான்காம் பாகத்தின் தொடர்ச்சியாம் இப்படம். 94 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இதனை, Mike Thurmeier மற்றும் Galen T. Chu ஆகிய இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர். John Debney இசை அமைக்க, Renato Falcao ஒளிப்பதிவு செய்துள்ளார். James Palumbo படத்தை தொகுத்துள்ளார். Fox Star Studios நிறுவனத்தின் உருவாக்கம் இப்படம்.

Scrat (Chris Wedge, குரல் வளம்!) என்கிற அணில் ஒன்று, தனக்கு மிகவும் விருப்பமான Acron என்கிற ஒரு பருப்பு மிகுந்த கனி ஒன்றினை தேடி செல்லும் தருணம், ஆர்வ கோளாறு காரணமாக, பூமியின் முகப்பை தாண்டி செல்ல, அதனால் அதிர்வுகள் உண்டாகின்றன!

Sid (John Leguizamo, குரல்) என்கிற ஓர் அமெரிக்க உயிரினம்(மரங்களில் வாழ்பவை), Manny (Ray Romano, குரல்), என்கிற யானை, Deigo(Denis Leary) என்கிற ஒரு புலி, இன்னும் இதர உயிரினங்கள், தங்களது உறைவிடங்களிலிருந்து அகன்று செல்ல வேண்டிய அவசியம் உருவாகிறது. இதன் விளைவாக, எழும் அவற்றின் பயணம், நகைச்சுவை, சோகம் என பலவகை அனுபவங்களை அள்ளி தருமாம் இப்படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;