சென்சார் அதிகாரிகளின் பாராட்டு பெற்ற ‘நட்சத்திர ஜன்னலில்’

மாணவ மாணவியர் பெற்றோருடன் பார்க்க வேண்டிய படம்!

செய்திகள் 28-Jun-2016 11:32 AM IST VRC கருத்துக்கள்

’ஓம் சிவசக்தி முருகா ஃபிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நட்சத்திர ஜன்னலில்’. இப்படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அனுப்ரியா அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘போஸ்’ வெங்கட், ‘பாய்ஸ்’ ராஜன், ஜீவா ரவி, பெஞ்சமின், செல்வகுமார், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீலதா, நர்மதா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஜெயமுருகன் படம் குறித்து கூறும்போது, ‘‘மீபத்தில் இப்படத்தின் சென்சார் நடந்தது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘மாணவ மாணவியர் அனைவரும் தங்களது பெற்றோர்களுடன் பாரக்க வேண்டிய படம் இது’ என்று பாராட்டி படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இது எங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்’’. இப்படதை ரசிகர்களின் பார்வைக்கு விரைவில் வெளியிடவிருக்கிறோம்’’ என்றார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘நடசத்திர ஜன்னலில்’ படத்திற்கு உதயன் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடக்கும் தெற்கும்


;