அஜித்தின் ‘வேதாள’த்தைத் தொடர்ந்து ரஜினியின் ‘கபாலி’!

வேதாளம் படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்ட ஜாஸ் சினிமாஸ் இப்போது ‘கபாலி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியிருக்கிறது

செய்திகள் 28-Jun-2016 11:12 AM IST Chandru கருத்துக்கள்

இறுதிக்கட்ட வேலைகளில் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது ‘கபாலி’. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து இந்த வார இறுதியில் சென்சாருக்கு படத்தை அனுப்பவிருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ‘கபாலி’ படத்தின் வியாபாரங்களும் ‘வாய் பிளக்க’ வைத்துக் கொண்டிருக்கின்றன. லேட்டஸ்ட்டாக நமக்குக் கிடைத்த தகவலின்படி, ‘கபாலி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம்.

விநியோகத்துறையில் கடந்த வருடம் கால் பதித்த ‘ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் வெளியிட்ட முதல் திரைப்படம் அஜித்தின் ‘வேதாளம்’. அதோடு சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘இறைவி’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஆகிய படங்களின் சென்னை வெளியீட்டு உரிமையையும் இந்நிறுவனமே கைப்பற்றியிருக்கிறது.

இப்போது ‘கபாலி’யின் தமிழக வெளியீட்டு உரிமைக்காக மிகப்பெரிய தொகை கொடுத்திருக்கிறதாம் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;