‘டாப் கியரி’ல் பயணிக்கும் நிக்கி கல்ராணி!

‘டார்லிங்’ நாயகி நிக்கி கல்ராணி மேலும் இரண்டு புதுப்படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

செய்திகள் 28-Jun-2016 10:22 AM IST Chandru கருத்துக்கள்

‘வெள்ளிமூங்கா’ படம் மூலம் மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை நிக்கி கல்ராணி தமிழில் ‘டார்லிங்’ மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படமே ஹிட் என்பதால், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ‘யாகாவராயினும் நா காக்க’ படம் பெரிய அளவில் ‘ரீச்’ ஆகவில்லை என்றாலும், அப்படத்தில் அவர் புல்லட் ஓட்டிய ஸ்டைலுக்காகவே ரசிகர்கள் அவரை பெரிதும் ரசித்தனர்.

இந்நிலையில், இந்த வருடம் நிக்கி கல்ராணி நாயகியாக நடித்து வெளிவந்த ரெண்டு படங்களுமே அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. பாபி சிம்ஹாவுடன் நடித்த ‘கோ 2’ திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல பெயரை வாங்கியது. அதோடு சமீபத்தில் வெளியாகி இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எழிலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் நிக்கியின் கேரியரில் பெரிய வசூல் செய்த படமாகவும் அமைந்துள்ளது.

அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக அமைந்துவிட்டதால், இப்போது நிக்கி ‘டாப் கியரி’ல் பயணித்துக் கொண்டிருக்கிறார். ராகவா லாரன்ஸுடன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ஜி.வி.பிரகாஷுடன் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படங்களில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிக்கி, மேலும் 2 தமிழ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கவிருக்கும் புதிய படமொன்றிலும், ஜீவாவுக்கு ஜோடியாக ‘கீ’ என்ற படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நிக்கி.

இதில் ஜீவா நாயகனாக நடிக்கும் ‘கீ’ படத்தை செல்வராகவனிடம் அசோசியேட்டாகப் பணிபுரிந்த கலீஷ் என்பவர் இயக்குகிறார். ரொமான்டிக் காமெடியாக உருவாக உள்ள இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய வேடமொன்றில் நடிப்பார் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்க உள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் தமிழ் - ட்ரைலர்


;