‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு ‘சண்டக்கோழி’யின் 2ஆம் பாகத்தை லிங்குசாமி இயக்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அப்படம் கைவிடப்பட்டதாகவும், அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்குவார் எனவும் செய்திகள் வந்தன. ஆனால், ‘சரய்னோடு’ தெலுங்குப் படத்திற்குப் பிறகு வேறொரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் களமிறங்கிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இப்போது மீண்டும் ‘சண்டக்கோழி 2’வின் வேலைகள் துவங்கியிருப்பதாக லிங்குவின் ட்வீட் மூலம் அறிய முடிகிறது. இந்த 2ஆம் பாகத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்ற தகவலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இதன்மூலம் சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் லிங்குசாமியுடன் இணைந்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...