தீபாவளிக்கு பிரம்மாண்டமாக ரிலீஸாகும் கார்த்தியின் ‘காஷ்மோரா’

தீபாவளிக்கு பிரம்மாண்டமாக ரிலீஸாகும் கார்த்தியின் ‘காஷ்மோரா’

செய்திகள் 27-Jun-2016 11:05 AM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘காஷ்மோரா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ கோகுல் இயக்கியிருக்கும் இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடமொன்றில் நகைச்சுவை நடிகர் விவேக்கும் நடித்துள்ளார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ராஜீவனின் பிரம்மாண்ட செட்களில் படமாக்கப்பட்டுள்ளன. அதோடு உயர்தர கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.

‘காஷ்மோரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தீபாவளி அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;