‘தூங்காவனம்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தை இயக்கி நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தை இயக்குவதற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் டி.கே.ராஜீவ்குமார். ஆனால், இவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது கமலே இயக்குனர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். ஜூன் 6ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தமிழ், தெலுங்கில் ‘சபாஷ் நாயுடு’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சபாஷ் குண்டு’ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் 3 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ‘ரேப்அப் பார்ட்டி’ கொண்டாடிய புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
விரைவில் இந்தியாவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது. கமல் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், மனு நாராயணன், பிரம்மானந்தம் (தமிழ், தெலுங்கு), சௌரப் சுக்லா (ஹிந்தி) உட்பட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஜெய கிருஷ்ணா கம்மாடி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை டிசம்பர் 1ஆம் தேதி திரையிட திட்டமிட்டுள்ளார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
‘2.0’ படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன்-2’. கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா...