இறுதிகட்டத்தில் சி.வி.குமார் இயக்கும் ‘மாயவன்’

இயக்குனராக களமிறங்கும் பிரபல தயாரிப்பாளர்!

செய்திகள் 27-Jun-2016 10:46 AM IST VRC கருத்துக்கள்

‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’ ‘இன்று நேற்று நாளை’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’ என பல படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் இயக்குனராக களமிறங்கும் படம் ‘மாயவன்’. சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் சி.வி.குமார் தனது இயக்குனர் அனுபவம் குறித்து குறும்போது, ‘‘மாயவன்’ கதை உருவான பின் இயக்குனர் நலன் குமாரசாமியை அழைத்து இப்படத்தை இயக்கி தரும்படி சொன்னேன். கதையை கேட்டவர்ம் ‘நன்றாக இருக்கிறது என்று சொல்லி இதற்கு நான் திரைக்கதை அமைத்து தருகிறேன் நீங்களே இயக்குங்கள்’ என்றார். ஆனால் இயக்கம் என்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இதனை இயக்க முடியும் என்று நம்பிக்கை அளித்தனர். அதன் பின்னர் தான் மும்முரமாக படம் இயக்கும் வேலையில் இறங்கினேன். தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறாது.

இப்படத்தின் கதையை க்ரைம் த்ரில்லர் பின்னணியில் அமைத்திருக்கிறோம். இதுவரை நான் தயாரித்த அனைத்து படங்களிலும் பட துவக்கம் முதல் முடிவு வரை அனைத்திலும் எனது பங்களிப்பு இருந்துள்ளது. ஒரு தயாரிப்பாளராக இருந்து இயக்குனரை வேலை வாங்குவதற்கும், இயக்குனராக வேலை செய்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை இப்படம் நன்றாக உணர்த்தியது. இந்த கதையை நான் இயக்குகிறேன் என்று கூறியவுடன் ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜாவும் முன் வந்தார். அவரது நிறுவனத்துடன் எங்களது ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவன்ம் இணைது இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தை விரைவில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

இப்படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி ஆகியோருடன் டானியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் வில்லன்களாக நடிக்கிறார்கள். அக்‌ஷரா கௌடா, பகவதி பெருமாள், மைம் கோபி, ஜெயபிரகாஷ் ஆகியோரும் நடிக்கிறாகள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவை கவனிக்க, ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;