'இவன் யாரென்று தெரிகிறதா' டிரைலரை வெளியிட்ட நடிகர் விஷால்!

'இவன் யாரென்று தெரிகிறதா'  டிரைலரை வெளியிட்ட நடிகர் விஷால்!

செய்திகள் 27-Jun-2016 10:14 AM IST Chandru கருத்துக்கள்

‘Own Cinemaas’ நிறுவனம் சார்பா எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்கியுள்ள படம் ‘இவன் யாரென்று தெரிகிறதா’. ‘மஞ்சப்பை’ புகழ் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு P&G ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரொமான்ஸ் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் விஷ்ணு, ‘வெற்றிவேல்’ புகழ் வர்ஷா மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கே.பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், பகவதி பெருமாள், ராமச்சந்திரன், அர்ஜுனன், ராஜ்குமார் உட்பட மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எடிட்டிங் கோபி கிருஷ்ணா, கலை இயக்கம் வினோத் ராஜ்குமார், நடனம் தினேஷ் மற்றும் நந்தா, சண்டைப்பயிற்சி ‘கபாலி’ புகழ் அன்பறிவ்.

‘இவன் யாரென்று தெரிகிறதா’ படத்தின் டிரைலரை நேற்று வெளியிட்டு பேசிய விஷால், ‘‘இந்த டிரைலர் முழுக்க முழுக்க வண்ணமயமாகவும், காமெடி கலாட்டாவாகவும் உருவாகியிருப்பதை என்னால் உணரமுடிகிறது. ‘இவன் யாரென்று தெரிகிறதா’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;