‘பைசா’வில் குப்பை பொறுக்கும் ஸ்ரீராம்!

‘தூய்மை இந்தியா’வை சிறப்பிக்கும் பைசா!

செய்திகள் 25-Jun-2016 5:21 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில்‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கியிருக்கும் படம் ‘பைசா’. இப்படத்தில் ‘பசங்க’, ‘ரேணிகுண்டா’ படங்கள் புகழ் ஸ்ரீராம் கதாநாயகனக நடிக்க, புதுமுகம் ஆரா கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக தீபிகா என்ற புதுமுகம் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன், மதுசூதன் ராவ், ராம்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் அப்துல் மஜீத் கூறும்போது,
‘‘குப்பை பொறுக்கிறவர்களின் வாழ்க்கைப் பின்னணியை வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தெருக்களில் குப்பை பொறுக்கும் இளைஞனாக ஸ்ரீராம் நடித்துள்ளார். இப்படி குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்துபவர்களின் சோகம், சந்தோஷம், சமூக பார்வையில் அவர்களுக்கான இடம் என பல விஷயங்களை இப்படத்தில் தொட்டுள்ளோம். ‘பைசா. ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கு ஏற்ற படமாக இருக்கும்! இப்ப டத்தை பார்க்கிறவர்களுக்கு தெருக்களில் குப்பை கொட்டுகிறவர்கள் கெட்டவர்களாகவும், குப்பை பொறுக்கிறவர்கள் நல்லவர்களாகவும் தெரிவார்கள். அது மாதிரி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

‘கான்பிடண்ட் ஃபிலிம் கஃபே’ மற்றும் ‘ ஆர்.கே.ட்ரீம் வேல்ட்’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் சார்பில் இயக்குனர் அப்துல் மஜீத், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘பைசா’விற்கு ஜே.வி.இசை அமைத்துள்ளார். கே.பி.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆக்ஸ்ட் மாதம் 1-ஆம் தேதி ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;