தயாரிப்பாளராகும் கலை இயக்குனர்!

விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை தயாரிக்கும்  கலை இயக்குனர்!

செய்திகள் 25-Jun-2016 1:22 PM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என் 60-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் ராஜீவன். இவர் தயாரிப்பாளராகிறார். இயக்குனர் சுசீந்திரனின் தம்பி டி.என். தாய் சரவணன் தனது ‘நல்லு சாமி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தின் தயாரிப்பில் கலை இயக்குனர் ராஜீவனும் இணைந்துள்ளார். சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால், பார்த்திபன் முக்கிய கேர்டர்களில் நடிக்க விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சுசீந்திரனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கும் இப்படத்திற்கு இளையராஜ ஒளிபதிவு செய்ய, காசி விஸ்வநாத் எடிட்டிங் செய்கிறார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;