முதல் சர்வதேச ஆல்பத்திற்குத் தயாராகும் அனிருத்!

இசை ஆல்பம் ஒன்றிற்காக அமெரிக்க தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்துள்ளார் அனிருத்

செய்திகள் 25-Jun-2016 1:19 PM IST Chandru கருத்துக்கள்

‘கொலவெறி’ மூலம் உலகமெங்கும் கவனம் பெற்ற இசையமைப்பாளர் அனிருத், தற்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர். படங்களுக்கு இசையமைப்பதோடு அவ்வப்போது தனிப்பட்ட இசை ஆல்பங்கள் வெளியிடுவது, லைவ் கான்சர்ட்ஸ் என எப்போதும் பிஸியாக இருக்கும் அனிருத், விரைவில் சர்வதேச இசை ஆல்பம் ஒன்றையும் வெளியிடவிருக்கிறார். இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான டிப்லோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் அனிருத். இந்த செய்தியை டிப்லோ தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாட்டில் அனிருத்தின் புகழ் இன்னும் உச்சத்திற்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ரம், ரெமோ, தல 57 உட்பட பல தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;