‘கபாலி’ படைக்கப்போகும் இன்னொரு சாதனை!

ரஜினியின் ‘கபாலி’ படம் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லே கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் பிரீமியருக்குத் தேர்வாகியிருக்கிறது

செய்திகள் 25-Jun-2016 1:05 PM IST Chandru கருத்துக்கள்

அறிவிப்பு வெளியானதிலிருந்தே புதுப்புது சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது ரஜினியின் ‘கபாலி’. 2 கோடி பார்வையிடல்களை யு டியூப்பில் எட்டிய முதல் டீஸர் என்ற சாதனையைப் படைத்த கபாலி, அதிக லைக் வாங்கிய இந்திய டீஸர் என்ற சாதனையையும் செய்திருக்கிறது. இதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான ‘நெருப்புடா...’ பாடல் வரிகள் வீடியோக்கும் இதுவரை 62 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்கள் கிடைத்துள்ளன. அதோடு ‘மலாய்’ மொழியில் ரிலீஸாகும் முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையையும் ‘கபாலி’ படைக்கவிருக்கிறது. இந்தியாவிலேயே வேறெந்த படத்திற்கும் கிடைக்காத கௌரவமாக, ஏர் ஏசியா விமான சேவை ‘கபாலி’ படத்தின் சிறப்புக் காட்சிக்காக தனி விமான சேவையை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இன்னொரு புதிய சாதனைக்கும் தயாராகி வருகிறது கபாலி.

பாரிஸில் உள்ள பழமை வாய்ந்த திரையரங்கம் ‘லே கிரான்ட் ரெக்ஸ்’. 2700 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கக்கூடிய மிக பிரம்மாண்டமான இந்த திரையரங்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகும் மிகப்பிரபலமான படங்களின் பிரீமியர் காட்சி ஒளிபரப்படும். இந்த திரையரங்கில் ரஜினியின் ‘கபாலி’ படம் ஜூலை 14ஆம் தேதி பிரீமியர் காட்சி திரையிடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘லே கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் பிரீமியர் காட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய படம் ‘கபாலி’ என்பது குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், தினேஷ், கலையரசன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘கபாலி’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;