‘சந்திரமுகி’க்கு பிறகு மீண்டும் பி.வாசு, வடிவேலு!

பி.வாசுவின் ‘சிவலிங்கா’ புதிய தகவல்கள்!

செய்திகள் 25-Jun-2016 12:32 PM IST VRC கருத்துக்கள்

பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் ‘சிவலிங்கா’. இந்த படத்தை தமிழுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்கள் செய்து, ஒரே நேரத்தில் பி.வாசுவே தமிழிலும், தெலுங்கிலும் இயக்கவிருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டிருந்தோம். ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் வாசுவின் மகன் சக்தி வாசு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, ‘சந்திரமுகி’ படத்தில் பி.வாசு இயக்கத்தில் நடித்த வடிவேலுவும் நடிக்கிறார். விஜய் நடித்த ‘திருப்பாச்சி’, ‘கத்தி’, அஜித் நடித்த ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’, சமீபத்தில் வெளியான ‘மிருதன்’ உட்பட 400-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும், சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ படத்தை தயாரித்தவருமான ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறது. அதனை தொடர்ந்து பெங்களூர், மைசூர், மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை பி.கே.எச்.தாஸ் கவனிக்க, எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸும், கலை இயக்கத்தை துரை ராஜும் கவனிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர் 02


;