‘டிமான்டி காலனி’ அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா!

கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தோடு கைகோர்த்துள்ளனர் அதர்வா மற்றும் ‘டிமான்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து

செய்திகள் 25-Jun-2016 11:38 AM IST Chandru கருத்துக்கள்

‘டிமான்டி காலனி’ படம் மூலம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்ற இயக்குனர் அஜய் ஞானமுத்து ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்குப் பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிப்பதற்காக இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரம் ஒருவருடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். சம்மதம் தெரிவித்ததும், அவர் யார் என்பதை விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். தற்போது இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தேடுக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் முதல் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;