மீண்டும் தயாரிப்பில் இறங்கும் பிரகாஷ்ராஜ்!

கன்னட படத்தை ரீ-மேக் செய்யும் பிரகாஷ் ராஜ்!

செய்திகள் 24-Jun-2016 5:27 PM IST VRC கருத்துக்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரகாஷ் ராஜின் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘உன் சமையல் அறையில்’. இந்த படத்தை தொடர்ந்து நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்த பிரகாஷ் ராஜ் மீண்டும் தயாரிப்பில் இறங்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் மற்ற மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் ரீ-மேக் உரிமையை வாங்கி படங்களை தயாரித்து வரும் பிரகாஷ் ராஜ், இந்த முறை கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘Godhi Banna Sadharna Mykattu’ என்ற படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி அதனை தமிழிலும், தெலுங்கிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அத்துடன் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவும் இருக்கிறாராம் பிரகாஷ் ராஜ்! இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொம்புவச்ச சிங்கம்டா டீஸர்


;