ஷங்கரை பிரமிக்க வைத்த ‘ரெமோ’ விழா!

பிரம்மாண்ட நடந்த ‘ரெமோ’ விழா!

கட்டுரை 24-Jun-2016 1:46 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’வை ‘24 STUDIOS’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘ரெமோ’ என்பதால் ‘24 STUDIOS’ நிறுவன லோகோ அறிமுகமுகம், ‘ரெமோ’வின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் சாங் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழா அரங்கில் பிரத்தியேகமாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட LED TV திரையில் இளம் ஆண், பெண் கலைஞர்களின் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ‘24 STUDIOS’ லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ‘ரெமோ’வின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் சாங்கும் வெளியிடப்பட்டது. இதனை பிரம்மாண்ட பட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் பேசும்போது, ‘‘வித்தியாசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்விழாவை பார்க்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது. நான் இயக்கி வரும் ‘2.0’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை எப்படி நடத்தலாம் என்ற யோசனை எனக்குள் வந்துவிட்டது! ‘ரெமோ’ பட குழுவினர் கடின உழைப்பு இங்கு தெரிகிறது. அதைப் போல ‘ரெமோ’ தயாரிப்பிலும் அவர்களது கடின உழைப்பு இருக்கும் என்பதால் ‘ரெமோ’ ஒரு வெற்றிப் படமாக அமையும் என்பது நிச்சயம்’’ என்றார்!

படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பேசும்போது, ‘‘முதலில் இப்படத்திற்கு வேறு கதாநாயகியை தான் தேடினார்கள்! என்னிடம் கூட சிவாவும் (சிவகார்த்திகேயன்), இயக்குனர் பாக்யராஜ் கண்ணனும், ‘உங்களுக்கு தெரிந்த ஹீரோயின்கள் இருந்தால் சொல்லுங்களேன்’ என்று சொல்லியிருந்தார்கள்! நானும் எனக்கு தெரிந்த சிலரை சிபாரிசு செய்தேன். ஆனால் கடைசியில் நானே ‘ரெமோ’வின் நாயகியாகி விட்டேன்! இன்னும் சொல்லப் போனால் இப்படதில் நான் இரண்டாவது கதாநாயகி தான். ‘ரெமோ’வை பொறுத்தவரையில் சிவா தான் கதாநாயகன், கதாநாயகி எல்லாம்’’ என்றார்.

‘ரெமோ’ ஹீரோ சிவகார்த்திகேயன் பேசும்போது, ‘‘ரெமோ’வில் நடிக்க ஒப்புக்கொண்டபோது இந்த படம் இவ்வளவு பெரிய படமாக உருவெடுக்கும் என்பது எனக்கு தெரியாது. இதற்கெல்லாம் காரணம் என் நண்பாரும் ‘ரெமோ’வின் தயாரிப்பாளருமான ஆர்.டி.ராஜா தான்! இப்படத்தின் தயாரிப்பாளர் நான் தான் என்று எழுதி வருகிறார்கள்! அதில் உண்மை இல்லை! இது முழுக்க முழுக்க ஆர்.டி.ராஜாவின் தயாரிப்பு! இப்போது நடந்து கொண்டிருக்கும் இவ்விழா கூட இவ்வளவு பிரம்மாணமாக நடக்கும் என்பது எனக்கு தெரியாது! ஆர்.டி.ராஜா கடின உழைப்பாளி! எதையும் வித்தியாசமாக, பர்ஃபெக்டாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்! ‘மெரினா’ பட புரொமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்திலிருந்து அவர் எனக்கு நண்பரானார்! ‘24 STUDIOS’ நிறுவனம் மூலம் ஆர்.டி.ராஜா பெரிய தயாரிப்பாளர் ஆகியுள்ளார். சினிமாவில் அவர் சக்சஸ்ஃபுல் தயாரிப்பாளராக வலம் வருவார்’’ என்றார்.

இவ்விழாவில் ‘ரெமோ’வின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, இசை அமைப்பாளர் அனிருத், ‘ரேமோ’விற்காக பாடல்கள் எழுதியிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் சதீஷ், ஏவி.எம்.சரவணன் முதலானோரும் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;