ஒரே நாளில் அறிமுகமாகும் 2 பெண் இயக்குனர்கள்!

இறுதிசுற்று’ சுதாவை தொடர்ந்து அஸ்வினி ஐயர், உஷா கிருஷ்ணன்!

செய்திகள் 24-Jun-2016 12:08 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் பெண் இயக்குனர்கள் அறிமுகமாவது அரிதான விஷயம்! ஆனால் சமீபகாலமாக பெண் இயக்குனர்களின் வருகை ஓரளவுக்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘இறுதி சுற்று’ படத்தை இயக்கிய சுதாவை தொடர்ந்து இன்று வெளியாகும் ‘அம்மா கணக்கு’ என்ற படத்தின் மூலம் அஸ்வினி ஐயர், ‘ராஜா மந்திரி’ என்ற படத்தின் மூலம் உஷா கிருஷ்ணன் என இரண்டு பெண் இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள். அஸ்வினி ஐயர் ஏற்கெனவெ ‘அம்மா கணக்கு’ படத்தின் ஹிந்தி மூல கதையான ‘நில் பேட்டி சனாடா’ படத்தை இயக்கி பாலிவுட்டில் அறிமுகமானவர். உஷா கிருஷ்ணன் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனரக பணி புரிந்த அனுபவத்துடன் ‘ராஜா மந்திரி’ மூலம் இயக்குனராக களமிறங்கியுள்ளார். ‘அம்மா கணக்கு’, ‘ராஜா மந்திரி’ இரு படங்களும் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருப்பதால் அஸ்வினி ஐயர், உஷா கிருஷ்ணன் இருவருக்கும் சினிமாவில் நல்ல எதிர்காலம் அமைய வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராஜா மந்திரி - டிரைலர்


;