லாரன்ஸுக்கு ஜோடியாகும் ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங்!

மாதவன், விஜய்சேதுபதியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாகிறார் ‘இறுதிச்சுற்று’ படத்தின் நாயகி ரித்திகா சிங்

செய்திகள் 24-Jun-2016 10:32 AM IST Chandru கருத்துக்கள்

குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் தமிழ், ஹிந்தி சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த ரித்திகா, தற்போது ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் புதிய படமொன்றிலும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரித்திகா. தன் இயக்கத்தில் ஷிவராஜ்குமார் நடித்து வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘சிவலிங்கா’ கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கைதான் இயக்குகிறார் பி.வாசு. ‘சந்திரமுகி’ படத்தைப் போல் இந்த ‘சிவலிங்கா’வும் வித்தியாசமான ஹாரர் படமாம். தமிழிலும் ‘சிவலிங்கா’ என்ற பெயரிலேயே உருவாகவிருக்கும் இப்படத்தில் இயக்குனர் வாசுவின் மகனும், நடிகருமான சக்தி முஸ்லீம் இளைஞன் கேரக்டரில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 14ஆம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;