‘ரெமோ’ பட நிறுவனத்தில் ‘பிரேமம்’ நாயகன்!

ரெமோ, மோகன் ராஜா இயக்கத்தில் புதிய படமொன்று ஆகியவற்றைத் தொடர்ந்து ‘24 ஏஎம் ஸ்டுடியோஸி’ன் 3வது தயாரிப்பில் நிவின் பாலி நாயகனாகிறார்

செய்திகள் 24-Jun-2016 10:18 AM IST Chandru கருத்துக்கள்

ஆர்.டி.ராஜாவின் ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘ரெமோ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றையும் தயாரிக்கிறது இதே நிறுவனம். ‘ரெமோ’ படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் 3வது படத்தில் ‘பிரேமம்’ நாயகன் நிவின் பாலி நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கிறாராம் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. இப்படத்தை ‘பட்டாளம்’ படத்தை இயக்கிய ரோஹன் கிருஷ்ணா பிரபு ராதாகிருஷ்ணன் என்ற பெயர் மாற்றத்துடன் இயக்குகிறார். மற்ற அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்பட்ட பின்பு, முழு விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - டீசர்


;