’கபாலி’யை தொடர்ந்து ‘ராணி’யாக களமிறங்கும் தன்ஷிகா!

ராணியாக வலம் வரவிருக்கும் தன்ஷிகா!

செய்திகள் 23-Jun-2016 2:34 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்திருக்கும் தன்ஷிகா அடுத்து நடிக்கும் படம் ‘ராணி’. சமுத்திரகனியுடன் இணை இயக்குனராக பணியாற்றிய பாணி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் திருவண்ணாமலையில் இசைஞானி இளையராஜா முன்னிலையில் நடைபெற்றது. இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவிருப்பதால் விரைவில் இப்பட குழுவினர் மலேசியா பறக்கவிருக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ‘தங்கமகன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஏ.குமரன் ஏற்றுள்ளார். இந்த படத்தை ‘எம்.கே.ஃபிலிம்ஸ்’ என்ற பேனரில் சி.முத்து கிருஷ்ணன் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;